இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, டாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இருதரப்பு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருநாட்டு தலைவர்களின் முன்னிலையில் பேரழிவு மேலாண்மை, ஐ.சி.டி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இருதரப்பு இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்த 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியா-பங்களாதேஷ் நட்பு முத்திரைகளும் வெளியிடப்பட்டன.
வங்கதேசத்தின் சுகாதாரத் திறனை மேம்படுத்துவதற்காக, இந்தியாவில் இருந்து 109 அவசர ஊர்தியை வெகுமதியாக அந்தநாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி ஓரகாண்டியில் உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவும் வங்கதேசமும் நிலையற்ற தன்மை, பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மைக்கு பதிலாக உலகில் ஸ்திரத்தன்மை, அன்பு மற்றும் அமைதியைக் காண்பதற்காக இணைந்து பாடுபட்டு வருகின்றன. ஓரகண்டி ஆன்மீக குருவின் பிறப்பிடமாகவும், மாதுவா சமூகத்தின் நிறுவனர் ஹரிச்சந்த் தாக்கூராகவும் உள்ளது. இரு நாடுகளும் தங்கள் சொந்த முன்னேற்றத்தின் மூலம் உலகம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, இந்தியா - டாக்கா இடையே ரயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அப்துல் ஹமீதுவையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-வங்கதேசம் இடையே ஒத்துழைப்பு தொடர்பான விரிவான கருத்துப் பரிமாற்றம் இருதலைவர்களிடையேயும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, வங்க தேசத்தில் உள்ள காளி கோயிலில் தங்க கிரீடம் சூடி, பிரதமர் மோடி சிறப்பு ஆராதனையை மேற்கொண்டார்.