Sat. Apr 19th, 2025

மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத திருவிழாவான அறுபத்தி மூவர் உற்சவம் இன்று ( 26-3-2021 ) கோலகலமாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் பங்குனி மாத திருவிழாவுக்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில், விழாவின் முக்கிய வைபவமான திருத்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இரண்டாம் நாள் வைபவமாக, கோயிலில் இருந்து 63 நாயன்மார்களும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்தாண்டு கொரோனோ தொற்று எச்சரிக்கையின் காரணமாக பங்குனி பெருவிழா தடைபட்டது. அதனால், வருத்தத்தில் இருந்த பக்தர்கள், குடும்பத்தினருடன் வருகை தந்து, அறுபத்து மூவர் திருவிழாவை பக்தி பரவசத்துடன் கண்டு ஆனந்தமடைந்தனர்.

.