திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் , நடத்த வருமான வரி சோதனையில் 8 கோடி ருபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனை தலைவராக கொண்டுள்ள மக்கள் நீதி மையத்தின் மாநில பொருளாளர் சந்திரசேகா. இவர், திருப்பூர் வசித்து வரும் இவர், லட்சுமி நகரில் பிரிட்ஜ்வே காலனியில் அனிதா டெக்ஸ்காட் எனும் பெயரில் பின்னலாடை மற்றும் நூல் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மேலும், அனிதா ஹெல்த்கேர் என்ற பெயரில் மருத்துவ உபகரணங்களை தயார் செய்து வருகிறார் சந்திரசேகரன். இந்த நிறுவனம் மூலம், கொரோனா கவச ஆடைகள் ,முகக் கவசங்கள் ஆகியவற்றை தமிழக அரசுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார்.
நடிகர் கமலின் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான. ராஜ்கமல் FRONTIERS PRIVATE LIMITED நிறுவனத்தில் கமலுடன் தொழில் கூட்டாளியாகவும் இவர் இருந்து வருகிறார். இந்த நட்பின் அடிப்படையில், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், மத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகள் இவர் வகித்து வருகிறார்.
இநநிலையில், நேற்று காலை (மார்ச் 17) காலை 11 மணியளவில் அவரது நிறுவனத்திற்கு சென்னையில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர சோதனை மேற்கொண்டனர். இதேபோல அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சுமார் 20-க்கும் மேற்பட்டவருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நேற்றிரவு வரை இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்றது.
2-வது நாளாக இன்று காலை முதல் (மார்ச் 18) அவரது நிறுவனம் மற்றும் வீட்டில் சோதனை நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற சோதனையில் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கணக்கில் காட்டப்படாத 8 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.