மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீர் தாக்குதலில் சிக்கினார். இதனையடுத்து, அவரது குதிக்கால் உள்பட உடலின் பல்வேறு இடங்களில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், பூரண குணமடையாததற்கு முன்பு பிரசாரத்திற்கு மீண்டும் கிளம்பிவிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பகுதியில்பரப்புரையில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மம்தா தலைமையிலான மாநில அரசை கிண்டல் செய்து பேசினார். அதற்கு போட்டியாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா, பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
புரூலியா பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காலில் கட்டோடு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பேசிய அவர், பிரதமர் திறமையற்றவர், அவரால் நாட்டை வழி நடத்த முடியாது. பாஜக சார்பாக மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக டெல்லிக்குச் சென்றவர்களால், மேற்கு வங்க மாநிலத்திற்கு எந்த நம்மையும் இல்லை. அவர்களால் கலவரங்களைதான் உருவாக்க முடியும். தப்பித்தவறி தேர்தலில் வெற்றிப் பெற்றால், பொய் கதைகளை அவிழ்த்துவிடுவார்கள். உலகில் வேறு எந்த அரசாங்கமும் செய்ய முடியாத அளவுக்கு மேற்க வங்க மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்துள்ளது.
சில நாட்கள் காத்திருங்கள், என் கால்கள் நன்றாக குணமடைந்துவிடும். வங்காள மண்ணில் உங்கள் கால்கள் சுதந்திரமாக நகருமா என்பதை நான் பார்க்கிறேன் என்று யாருடைய கூறிபெயரையும் (பாஜக மீது மறைமுக தாக்கு) குறிப்பிடாமல் கூறினார் பானர்ஜி/.