Sun. May 19th, 2024

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.35,312-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 அதிகரித்து ரூ.4,413-க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது…

மாசி மாதம் பிறந்துள்ள நிலையில், ஆபரண தஙகத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருவது சுப முகூர்த்த விழாவுக்கு ஏற்பாடு செய்து வரும் பொதுமக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.

தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்து வருவதும் ஒரு காரணம் என தங்க விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.