தமிழ்நாடு வாடகை கார்ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் , அச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரை சந்திக்க சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், ஒரு சில நிமிடங்கள் கூட அவர்களின் கோரிக்கையை பொறுமையாக கேட்காமல், விரட்டிவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.