இசைஞானி இளையராஜாவை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்த மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டனர்.
அதேசமயம், அவருக்கு வழங்கப்பட்ட மரியாதையை பல்வேறு தரப்பினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றதுடன், இளையராஜாவின் இசை சாதனைக்கு மத்திய பாஜக அரசு உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளதாக பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. அதேசமயம், மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டவர்களை பற்றிய அறிவிப்பில் இளையராஜாவை தலித் என்று குறிப்பிட்டதற்கு அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், கள போராளிகள் உள்ளிட்டடோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் விளையாட்டுகளை எல்லாம் அரசியல்வாதியிடம் காட்டுங்கள். படைப்பாளியான இளையராஜாவை விட்டுவிடுங்கள் என ஆளும்கட்சியான திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலியில் சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் இதோ….