பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின சமுதாயத்தின் அரசியல் பிரமுகரான திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
திரவுபதி முர்மு, ஒடிசாவில் அமைச்சராகவும் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்…