Thu. Nov 21st, 2024

குடியரசுத் தலைவர் தேர்தல்; யஷ்வந்த் சின்ஹா போட்டி- எதிர்க்கட்சிகள் அறிவிப்பு…

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், விசிக உள்ளிட்ட 11 பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற தீவிர ஆலோசனைக்குப் பிறகு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகிய மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை பொதுவேட்பாளராக நிறுவத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யஷ்வந்த் சின்ஹா தேர்வு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

புலிகள் போராட்டத்தை ஆதரித்தவர் சின்ஹா….

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈழத்தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் தீய சிந்தனையுடன் இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசைக் கண்டித்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி ரசாயணக் குண்டுகளை வீசி இலங்கை ராணுவம் கொடூர செயலில் ஈடுபட்ட போது, இந்திய அளவில் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், சிங்கள அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்தது. அப்போது நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஈழத்தமிழருக்கான போர் தாக்குதல் உக்கிரம் அடைந்து வருவதை சுட்டிக்காட்டி, இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு கடுமையான எச்சரிக்கையை இந்திய அரசு விடுக்க வேண்டும் என்று ஆவேசமாக குரல் கொடுத்தவர் யஷ்வந்த் சின்ஹா.

தமிழர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் வைகோ எந்தளவுக்கு ஆவேசம் காட்டுவாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் ஈழத்தில் விடுதலைப் புலிகளை கொன்றொழிக்கும் நாசக்கார செயலில் ஈடுபட்ட சிங்கள ராணுவத்தை கடுமையாக கண்டித்து பொங்கியவர் சின்ஹா என்று தமிழக எம்பி ஒருவர் நினைவுக்கூர்கிறார்.

யஷ்வந்த் சின்ஹாவின் சிறப்புகள்….

பீறகார் மாநிலம் பாட்னாவில் 1937 ஆம் ஆண்டில் பிறந்தவர் யஷ்வந்த் சின்ஹா. அரசியல் அறிவியல் பட்டம் பெற்றார்.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் 24 ஆண்டுகாலம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பதவிகளை தொடர்ச்சியாக வகித்தார்.

1971 73 ஆம் ஆண்டு வரை ஜெர்மனியில் இந்திய தூதரகத்தில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியவர். பின்னர் ஜெர்மனிக்கான இந்திய தூதரகவும் பணியாற்றியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகிய சின்ஹா, அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கினார். அப்போது ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

1986 ல் ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1988 ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1989 ல் ஜனதா தளம் என்ற பெயரில் கட்சி உதயமான போது அதன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் சின்ஹா.

1990 ல் இந்தியான் நிதியமைச்சராக அப்போதைய பிரதமர் சந்திரகேர் தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றினார்.

1996 ல் பாஜகவில் இணைந்து தேசிய செய்தித் தொடாபாளர் ஆனார்.

1998,1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஹசாரிபாக் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ர்.

2002 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகியவர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.