Fri. Nov 22nd, 2024

5 மாநிலசட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை..

தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை பிரதமர் மோடி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில், முன்னணி தலைவர்கள், மாநில தலைவர்கள், தேசியச் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
பா.ஜ.க. உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், 5 மாநில தேர்தல், விவசாயிகள் தொடர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை ஜே.பி.நட்டாவும், பிரதமர் மோடி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனோ தொற்று பரவலால் ஓராண்டிற்கு மேலாக கட்சிக் கூட்டங்களில் நேரடியாக கலந்துகொள்வதை தவிர்த்து வந்த பிரதமர் மோடி, முதல்முறையாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்பட மகளிர் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.