Sat. Nov 23rd, 2024

தகவல் அருந்தவராஜ்…

செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக விண்கலம் தரையிறக்கம்.
(சாதனைப் பெண் சுவாதி மோகன்.)


நெற்றியில் திலகமிட்டு ( வெற்றித் திலகம்) சரித்திர சாதனையை உலகுக்கு அறிவிக்கின்றார் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சுவாதி மோகன் அவர்கள்.
நாசா விண்வெளி மையம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கும் விண்கலம் ஒன்றை உருவாக்கி அதற்கு விடா முயற்சி (perseverance ) எனப் பெயரிட்டது. இதன் உருவாக்கம் , பயணம் , தரையிறக்கம் போன்ற பணிகளுக்கான தலைமை விஞ்ஞானியாக பொறுப்பு வகிக்கின்றார் சுவாதி மோகன் அவர்கள்.
கடந்த (2020) யூலை மாதம் 30 நாள் ஏவப்பட்ட விடாமுயற்சி என்ற விண்கலம் நேற்றைய தினம் (பெப்ரவரி 18. 2021) செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. 480 மில்லியன் கிலோ மீற்றர் பயணம் செய்து செவ்வாய்க் கிரகத்தை அடைந்துள்ளது ( சுற்றுவட்டப் பாதையைப் பொறுத்து தூரம் வேறுபடும்). விண்கலத்தில் இருந்து ஆய்வுப் பணிக்கான ரோவர்(Rover) இயந்திரம் , மற்றும் சிறிய உலங்கு வானூர்தி ( Hilicopter) என்பன தனியாகப் பிரிந்து செவ்வாய்த் தரையிலும் , மேற்பரப்பிலும் ஆய்வுப் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளன.
பண்டைய காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்த உயிரியல் தடையங்களை தேடுதல் , சேகரித்தல் மற்றும் அங்குள்ள பாறைகள் .மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருதல், செவ்வாயின் தினசரி பருவ மாற்றங்களை அறிதல் , உயிர் வாழ்வுக்கான ஒட்சிசனை உற்பத்தி செய்ய முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகவுள்ளன.
இந்தப் பயணம் எதிர்கால மனிதகுடியேற்றங்களுக்கான ஆரம்ப செயற்திட்டமாகவும் அமையப் போகின் றது என்பதும் மறுப்பதற்கில்லை.
” பொட்டு வைத்த மங்கை வானத்தை புட்டுப் புட்டு வைக்கிறார். உலகம் அவரை உன்னிப்பாகக் கவனிக்கிறது.
நாங்களும் வாழ்த்துவோம்”
:
அருந்தவராஜா.க
ஜெனீவா.

19.02.2021

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…….

Congratulations to @DrSwatiMohan, Guidance, Navigations and Control Operations Lead for @NASAPersevere.

Proud moment for India and the world.

Thrilled to see @NASAJPL and its scientists break new frontiers in science and expand our scope of knowledge.