Sun. Nov 24th, 2024

டெல்லியில் அண்ணா- கலைஞர் அறிவாலயம் எனும் பெயரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி. ராஜா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களும் திரளாக கலந்து கொண்டனர்..

டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் அதே வளாகத்தில் அமைந்துள்ள 45 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் திமுக எம்.பி., டி.ஆர். பாலு

மார்பளவு அண்ணா சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் துரைமுருகன்

திமுக அறிவாலயம் திறப்பு விழா நிகழ்வையொட்டி இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன..

முதல்வர் நெகிழ்ச்சி..