Fri. Nov 22nd, 2024

அசாம் மாநிலத்தில் துப்ரி – புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது 18 கிலோ மீட்டர் தூரததிற்கு பாலம் அமைக்க பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் இணைப்புச் சாலைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதால், அந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருதவாக தெரிவித்தார். 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த பாலத்தின் மூலம் பயண நேரம் சுமார் 5 மணிநேரம் மிச்சமாகும் என்றும் இதேபோல, அசாம் – மேகாலயா இடையே உள்ள 250 கி.மீ. தூரத்திற்கு பாலம் கட்டப்பட்ட பின்னர், 20 கிலோ மீட்டராக தூரம் குறையும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஒரு மாநிலத்தோடு இன்னொரு மாநிலம் சாலை மார்க்கமாக இணைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது என்றும் அதனை நிறைவேற்றும் பணி காலதாமதமாகிவிட்டது என்றும் கூறினார். அசாம் மற்றும் மேகாலயா மாநில மக்களின் நீண்ட நாள் கனவு இன்றைக்கு நிறைவேறியிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.