சட்டப்பேரவையில் இன்று காலை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இன்றைய கூட்டம் நிறைவுப் பெற்றது. தொடர்ந்து எத்தனை நாட்கள் பேரவையை நடத்துவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக்கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் 24 ஆம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த துறையின் அமைச்சரான எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அவரது உரையோடு நாளையக் கூட்டம் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து 24 ஆம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கான நிகழ்வுகளை அதன் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
அதன் விவரம் இதோ….
திங்கள் கிழமை (மார்ச் 21) அன்று பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடார்ந்து நடைபெறுகிறது.
மார்ச் 24 அன்று நிதிநிலை அறிக்கை மீதான வாக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக சட்டப்பேரவை அறிவித்துள்ள நிகழ்ச்சி நிரல் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.