Sat. Nov 23rd, 2024

சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணியளவில் 2022 – 23 ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

நிதிநிலை அறிக்கையின் முழு விவரம்:

TNLA-Tamil-Nadu-Budget-2022-2023Tamil-part-1-Date-18.03.2022

சிறப்பு அம்சங்கள்:

தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ் மொழியின் தொன்மையை கண்டறிய அகர முதலி எனும் பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான ஆய்வுக்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.

தொல்லியல் ஆய்வுகளுக்காக ₹7 கோடி ஒதுக்கீடு விழுப்புரம், ராமநாதபுரத்தில் ₹10 கோடி செலவில் அருங்காட்சியகம்

நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ₹15 கோடி ஒதுக்கீடு –

நீர் நிலைகளை பாதுகாப்பதற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக சிறப்பு நிதி ரூ.50 கோடி ஒதுக்கீடு.

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த பணியை மேற்கொள்ள நடப்பாண்டிற்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்படுகிறது.

தீயணைப்புத் துறைக்கு ரூ. 496 கோடி ஒதுக்கீடு.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ. 82.86 கோடி ஒதுக்கீடு.

காவல்துறை மேம்பாட்டிற்கு ரூ.10,282 கோடி ஒதுக்கீடு.

சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதித் திட்டத்திற்கு ரூ.4816 கோடி ஒதுக்கீடு.

கூட்டுறவுத்துறைக்கு ரூ. 4131 கோடி ஒதுக்கீடு.

பொது விநியோகத் திட்டத்திற்கு 7500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நீர்ப்பாசனத் திட்டத்திற்கு 2787 கோடி ஒதுக்கீடு.

வடடியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

பொது நூலகம் மேம்பாடு

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.

பொது நூலகங்களை மேம்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.

சென்னை அருகே தாவரவியல் பூங்கா அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.

அரசுப் பள்ளிகளை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 7000 கோடி ஒதுக்கீடு.

நான் முதல்வர் திட்டத்ததை செயல்படுத்த ரூ. 50 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களை திறன் வாய்ந்தவர்களாக உருவாக்கப்படும்.

புதிதாக உருவான 6 மாவட்டங்களிலும் புதிதாக மாவட்ட நூலகங்கள் உருவாக்கப்படும்.

ஆண்டுக்கு நான்கு இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

கல்லூரிகளுக்கு ரூ. 1000 கோடி செலவில் சிறப்புத் திட்டம்.

19 அரசு மருத்துவமனைகளை மாவட்ட அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்த ரூ.1019 கோடி நிதி ஒதுக்கீடு.

கிண்டி சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் ரூ. 125 கோடி செலவில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

வள்ளலார் பல்லுயிர் காப்பகம் அமைக்கப்படும்.

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள், தங்கள் கல்வி படிப்பை தொடர அனைத்து உதவிகளும் செய்யப்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் மேல்படிப்பிற்காக ரூ. 1000 நிதி உதவித்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

புரட்சித்தலைவர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ. 1949 ஒதுக்கீடு.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி உதவித்தொகைக்கு ரூ. 1963 கோடியும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ. 4281 கோடி ஒதுக்கீடு

சமத்துவப்புரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரப்பினர் மேம்பாட்டிற்கு ரூ. 322 கோடி ரூபாயும், மிதிவண்டி வழங்க ரூ. 162 கோடியும் ஒதுக்கீடு.

சிறுபான்மையினர் தொன்மையான வழிபாட்டு தலங்களை புனரமைக்க ரூ. 12 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.738 கோடி ஒதுக்கீடு.

தமிழக மருத்துவத் துறை மேம்பாட்டிற்காக ரூ. 17, 901 கோடி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு ரு. 2452 கோடி ஒதுக்கீடு.

பழங்குடி மக்கள் 1000 பேருக்கு வீடுகள் கட்டித் தர ரூ. 50 கோடி ஒதுக்கீடு.

அம்ருத் திட்டத்திற்கு ரூ.2310 கோடி ஒதுக்கீடு.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு.

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவதற்கான பயிற்சி வழங்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு.

கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 6 வழிச்சாலையாக மாற்ற ரூ.135 கோடி ஒதுக்கீடு.

பேருந்தில் மகளிர் இலவசமாக பயணிக்க ரூ.1520 கோடி ஒதுக்கீடு


பெரியார் எழுத்துக்களை மொழிபெயர்க்க 5 கோடி ஒதுக்கீடு.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும்

குடிநீர் வழங்கல்..

அனைத்து பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு (ஜல்ஜீவன்) ரூ.3000 கோடி ஒதுக்கீடு.

542 புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தொழில் துறை

71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த தனியார் பங்களிப்புடன் 2877 கோடி ரூபாய் செலவில் சிறப்புத் திட்டம்.

கயிறு உற்பத்தியில் வருமானத்தை பெருக்க

மின்வாரிய இழப்பை சமாளிக்க ரூ.13, 108 கோடி ஒதுக்கீடு

மின்வாரிய மானியத்திற்காக ரூ.9,377 கோடி ஒதுக்கீடு..

மனநல காப்பகத்திற்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு.

சிறு,குறு தொழில் மானியமாக ரூ. 300 கோடி ஒதுக்கீடு

5 மாவட்டங்களில் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும்.

ஈரோடு, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு.

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ. 340.87 கோடி ஒதுக்கீடு.

சுற்றுலாத்துறைக்கு 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 199.6 கோடி ஒதுக்கீடு

500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.7,000 கோடி குறையும்