Sun. Nov 24th, 2024

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பதன் மூலம் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினோ, பொதுமக்களே கோரிக்கை வைக்காத நிலையிலும், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை செயல்படுத்தினோம். அ.தி.மு.க. அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று தி.மு.க. தலைவர் பச்சை பொய்களை சொல்லி வருகிறார். தி.மு.க.வுக்கு எப்போதுமே கொடுத்து பழக்கமில்லை. எடுத்துதான் பழக்கம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து அவர், களக்காட்டில் மகளிர் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக அரசு சார்பில் மகளிர் முன்னேற்றத்திற்கு நிறைவேற்றியுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டு பேசினார்.

தொடர்ந்து திருநெல்வேலியில் முதலவர் இ.பி.எஸ். பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், குடும்பத்தைத் தவிர வேறு எவர் வந்தாலும் கட்சியை கைப்பற்றிவிடுவார்கள் என்ற பயம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. 70 வயதாகும் ஸ்டாலின் இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யாமல், இப்போது வந்து என்ன செய்யப்போகிறார்?

4 ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் . அதிமுக எந்த திட்டமும் செய்யவில்லை என ஸ்டாலின் பொய்யான பரப்புரை செய்து வருகிறார்.

மக்களோடு மக்களாக இருப்பதால், கஷ்டம் தெரிந்து தீர்வுகளை வழங்குகிறேன். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வாக்கு கேட்டு வந்துள்ளோம். ஆனால் ஸ்டாலின் போகிற இடத்திலெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார், என்று கூறினார்.