கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தலின் போது தேர்தல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் ஆவணங்களை கிழித்த தாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் திமுக பேருராட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் கோ சி மணியின் மகன் கோசி இளங்கோவன், உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தலின் போது பல இடங்களில் திமுகவினர் முறைகேடுகள் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துதல் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு கூட்டணி தர்மத்தை கேலிக்கூத்துகளை அரங்கேற்றினார்கள்.
இந்நிலையில் கும்பகோணம் அருகில் உள்ள ஆடுதுறை பேருராட்சியில் நடைபெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் முன்னிலையில் வேட்பு மனுக்களை பா.ம.க சார்பில் ம.க.ஸ்டாலின் தனது ஆதரவாளர்களான பா.ம.க.வை சேர்ந்த 4 வார்டு உறுப்பினர்கள் அதிமுக வை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சுயேட்சை உறுப்பினர் உள்ளிட்ட 8 உறுப்பினர்களுடன் வேட்பு மனுவினை தாக்கல் செய்ய இருந்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் ம.திமுகவிற்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது நான்கு இடங்களில் திமுக உறுப்பினர்களும் இரண்டு இடங்களில் முஸ்லீம் கட்சி உறுப்பினர்களும் ஒரு மதிமுக உறுப்பினர் உள்ளிட்ட மொத்தம் ஏழு உறுப்பினர்களின் ஆதரவுடன் தோல்வியை எதிர்நோக்கி இருந்ததால் தேர்தலை நிறுத்தும் வகையில் மூன்று திமுக உறுப்பினர்களை அவர்களே மறைத்து வைத்து விட்டு பா.ம.க வினர் கடத்தி விட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டதுடன் தேர்தலை நிறுத்த கோரி தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்தனர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பிற்கு பிறகு தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் மேசையில் இருந்த ஆவணங்களை கிழித்து எரிந்தும் தேர்தல் அலுவலரை பணி செய்ய விடாமல் மிரட்டியதால் தேர்தலை தள்ளி வைத்தார்.
இந்நிலையில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் கோசி இளங்கோவன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் ஷமிம்நிஷா, ம.திமுகவை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட 4 உறுப்பினர்கள் மீது தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் நான்கு உறுப்பினர்களும் தலைமறைவாகினர்.
இந்த சூழ்நிலையில் தள்ளி வைக்கப்பட்ட தேர்தல் நடைபெறுமா அல்லது நான்கு உறுப்பினர்களுக்கும் ஜாமீன் கிடைத்த பிறகு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது….