Mon. Nov 25th, 2024

தமிழகத்தில் 3 ஆம் கட்டமாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றனர்.

காலை 10 மணி நிலவரப்படி 21 மாநகராட்சிகளில் நகராட்சிகளில் திமுக கூட்டணி 325 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 82 கூட்டணியும் 76 இடங்களில் மற்ற கட்சியினர் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

மாநகராட்சி மன்ற உறுப்பினர்களில் மொத்தமுள்ள 1373 வார்டுகளில் திமுக கூட்டணி 196 இடங்களிலும் அதிமுக கூட்டணி 19 இடங்களிலும் பிற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 150 இடங்களில் திமுக மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

நகராட்சிகளில் 365 வார்டுகளில் திமுகவும் அதிமுக 98 வார்டுகளிலும் காங்கிரஸ் 19 வார்டுகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

பேரூராட்சி மன்றங்களில் மொத்தமுள்ள 7605 வார்டுகளில் திமுக கூட்டணி 624 வார்டுகளிலும் அதிமுக 129 வார்டுகளிலும் மற்ற கட்சிகள் 259 வார்டுகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை துவங்கி 2 மணி நேரத்தில் 90 சதவீத இடங்களில் திமுக கூட்டணிதான் முன்னிலை வகித்து வருகிறது. குதிரைப் பாய்ச்சலில் திமுக முந்திக் கொண்டிருக்கிறது. அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மிகவும் பின்தங்கியுள்ளது.