நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.. 6,7 மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்த அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு இன்று பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்..
நீட் மசோதாவை தமிழக சபாநாயகருக்கே திருப்பியனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள விளக்கம்:
தமிழ்நாடு அரசு அமைத்த நீட் உயர் மட்ட குழு அறிக்கையையும், அதை அடிப்படையாக வைத்து இயற்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாவையும் ஆய்வு செய்தேன். நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டம், நீட் தேர்வுக்கு பிந்தைய காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை ஒப்பிட்டு பார்த்தோம். அப்படி பார்க்கையில் இந்த மசோதா சமூக நீதிக்கு எதிரான மசோதாவாக அறியப்படுகிறது.
அதிலும் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் எதிரான மசோதாவாக இது உள்ளது,. அதனால் இந்த மசோதாவை திருப்பி அனுப்புகிறேன்.
அதேபோல் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது வேலூர் சிஎம்சி கல்லூரி மற்றும் மத்திய அரசு இடையிலான வழக்கில் ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இந்த மசோதா உள்ளது. அதில் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதா அந்த தீர்ப்பிற்கு எதிராக உள்ளது. அதனால் இதை திருப்பி அனுப்பி உள்ளோம் என்று ஆளுநர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.