Fri. Nov 22nd, 2024

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முறைகேடு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முறைகேடு செய்துள்ளதாகவும், அதனை விசாரித்து, அமைச்சருக்கு எதிராக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அப்பாபு கேட்டுக் கொண்டிருந்தார்.
இதேபோல, கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இந்ததால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அறிவித்திருந்தது. ஆனால், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜு உடந்தையாக இருந்ததாகவும் கூறி மற்றொரு மனுவையும் அப்பாபு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், பொதுத்துறை செயலாளரின் ஒப்புதலுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பி உள்ளதாக குற்றம் சாட்டிய அப்பாவு, இந்த புகார் மனுக்களின் மீது ஆளுநரின் ஒப்புதல் பெற்று புதிய வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உததரவிடக் கோரி, அப்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு எதிரான புகாரின் பேரி விரிவான விசாரணையை தலைமைச் செயலாளர் நடத்தியதாகவும், அந்த குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதால், அந்த புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.
இந்த வழக்குகளில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.