விவசாயிகளைப் போல மீனவர்களும் டெல்லியில் குடிபுகுந்து போராட்டம் நடத்த முடிவு……
மத்திய மீன் வளத் துறை அமைச்சருடன் தமிழ்நாடு, புதுச்சேரி அந்தமான் நிக்கோபார் தீவு 23 மீனவ அமைப்புகள் சந்திப்பு
தெற்காசிய மீனவர் தோழமை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கேப்டன் சஞ்சய் பிருஷார் தலைமையில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மாநிலங்களை சார்ந்த இருபத்திமூன்று மீனவர் அமைப்பினர் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தமன் ருபாலாவை தில்லியில் நேரில் சந்தித்தனர். இந்தியா சுதந்திரம் பெற்று எழுபது வருடங்களில்முதன்முதலாக மீனவர்களுக்கு மத்தியில் மீன்வளத்துறை அமைச்சர் தங்களை சந்தித்தந்தற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்திய கடல் மீன்பிடி மசோதா 2021 பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும், வாழ்வாதாரத்திற்கும் பெரிய இழப்புகளை ஏற்படுத்த இருப்பதால் இம்மசோதாவை கைவிட வேண்டுமென கோரிக்கை மனுஅளித்தனர்.
மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது கேப்டன் சஞ்சய் பிருஷார் கூறியதாவது:
புதிய சட்டமானது மீனவர்களது நாட்டுப் படகையும் விசைப்படகையும் இந்திய வணிக கப்பல் சட்டம் 1958 அடிப்படையில் பதிவு செய்யும்படி அறிவுறுத்துகின்றது. ஏழை மீனவர்கள் கடன்வாங்கி தங்கள் வாழ்வாதாரத்திற்காக நாட்டுப்படகு, விசைப்படகில் முதலீடு செய்கின்ற பொழுது அரசு சட்டம் அவர்களது சிறு படகுகளை கப்பல் சட்டத்திற்கு இணையாக பார்ப்பது மீனவர்களையும் மிகவும் கவலை படுத்தியுள்ளது.
● மேலும் இந்தச் சட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிப்பதை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்தும், தண்டிப்பதும், அபராதம் வசூலிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மீனவர்களது வாழ்வாதாரத்தையும் மீன்பிடித்தலையோ, மேம்படுத்துவதற்கான திட்டங்களோ, வழிமுறைகளும் இந்த புதிய சட்டத்தில் வழங்கப்படவில்லை. ஏற்கனவே ஏழ்மையிலும் கடன் பாரத்திலும்மூழ்கியுள்ள ஏழை மீனவர்கள் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏழை மீனவர்கள் மீண்டும் ஏழைகளாக இறக்க நேரிடும்.
● வெளிநாடுகளிலும் முக்கியமாக அரேபிய நாடுகளில் 50 ஆயிரத்துக்கு அதிகமான இந்திய மீனவர்கள் அரேபியன் முதலாளிகளின் விசைப்படகில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அந்த அரேபிய முதலாளிகள் இந்திய மீனவர்களின் உழைப்பைச் சுரண்டி (SOUTH ASIAN FISHERMEN FRATERNITY (SAFF) 4/124 Kottilpaadu Beach Road, Colachel (Post) Kanyakumari District., Tamil Nadu, India. 629 251 E-mail: fishermensaff@gmail.com; Cell: +91 9443017295 Fr. Dr. CHURCHIL, IVDei General Secretary ) அவர்களை கொள்ளை அடித்துள்ளார். ஆனால் அரேபிய அரசுகளும் மீனவர்களை கொள்ளையர்களைப் போன்று குற்றப்படுத்தி சிறையில் பல மாதங்கள் அடைப்பதுடன் அபராதமும் வசூலிக்கின்றனர் என்றும் பிருஷார் குற்றம் சாட்டினார்.
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சிலும் மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தமன் ருபாலாவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அவர் கூறியதாவது:
● பாரம்பரிய மீனவர்கள் ஒவ்வொரு முறையும் தங்களது மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளும், விசைபடகுகளும் மீன்பிடிக்க செல்வதற்கு எவ்வளவு மீன் பிடிப்போம், எந்த இடத்தில் பிடிப்போம், எந்த வகை மீன்களை பிடிப்போம், எவ்வளவு ரூபாய்க்கு பிடிப்போம் என்பது எங்களுக்கே தெரியாமல் இருக்கும் போது மீன்பிடிக்க செல்வதற்கு முன்பாக அதற்கான அனுமதியையும் எங்களால் எப்படி வாங்க இயலும். எம் மீனவர்கள் கடலிலேயே நீரோட்டம் மற்றும் காற்றின் திசைக்கு ஏற்ப மீன்கள் பயணிக்கும் திசைக்கும் இடத்திற்கும் ஏற்றார்போல் மீன்களை விரட்டி சென்று பிடிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அனுமதி வாங்க இயலாது.
● மீனவர்கள் கடலில் ஏதாவது தவறுகள், குற்றங்கள் செய்திருந்தால் இதுவரையும் அந்த மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து அபராதம் செலுத்த செய்வார்கள். ஆனால் இந்த புதிய சட்டத்தில்
இந்த அதிகாரமானது மீனவர்களை ஆய்வு செய்யும் அதிகாரம் இந்திய கடலோர காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை மீனவர்கள் அரசிடமிருந்து அனுமதி வாங்கிய உரிய
இடத்தில் மீன் பிடிக்காமல், அனுமதிக்கப்பட்ட மீனை பிடிக்காமலோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான மீனைப் பிடித்து இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
● சிறைப்பிடிக்கப்பட்ட மீன்பிடிக் கலன்கள், மீனவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க படுவார்கள். நீதிபதி இந்திய
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் மீனவர்களுக்கு தண்டனையும் அபராதமும் விதிபர்கள். இதில் மீனவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்தவேண்டிய சூழல் உள்ளது.
இப்படி மீன்பிடித் தொழிலில் உள்ள சிக்கலை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருட்பணி சர்ச்சில் வலியுறுத்தினார்.
ராமேஸ்வரம் விசைப்படகு சங்க தலைவர் மீனவர் சேசுராஜாவும், மீனவ சமுதாயம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். அவர் முன் வைத்த வாதம் இதோ:
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களின் தாக்குதலிலிருந்து எங்களை விடுபட வைப்பதற்காக SOUTH ASIAN FISHERMEN FRATERNITY (SAFF) 4/124 Kottilpaadu Beach Road, Colachel (Post)
Kanyakumari District., Tamil Nadu, India. 629 251 E-mail: fishermensaff@gmail.com; Cell: +91 9443017295 Fr. Dr. CHURCHIL, IVDei General Secretary மத்திய அரசு மானியத்தில் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு வழங்கினார்கள். ஆனால் அப்படகை கட்டிமுடிக்க கூடுதலாக 50 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. கடன் வாங்கி தான் அரசின் திட்டத்தை நிறைவு செய்துள்ளோம். எனவே மீனவர்கள் அதிகமாக இந்த திட்டத்தால் பயன் பெற கூடுதல் மானியம் தர வேண்டும் என விரும்பினார். பாண்டிச்சேரி விசைப்படகு சங்க பொருளாளர் மீனவர் மோகன் கடலில் பயன்படுத்துகின்ற டீசலில் சாலை வரி மற்றும் பசுமை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி சொந்த நாட்டிலே எம் மீனவர்கள் அரசுக்கு கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்பது மீனவர்களை தன் தேசத்திலேயே அந்நிய படுத்துவதாக உள்ளது ஏற்கனவே டீசல் விலை ஏற்றத்தால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய மீனவர்கள் இச்சட்டம் மேலும் பொருளாதார பாரத்தை அவர்கள் மீது செலுத்துகிறது. மேலும் ‘இந்திய கடல் வெளிநாட்டு மீன்பிடி கப்பல் ஒழுங்குமுறை சட்டம் 1981’ ரத்துசெய்து அதே சட்டத்தை பாரம்பரிய மீனவர்கள் 12 நாட்டிக்கள் அப்பால் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகு, விசைப்படகில் மீன் பிடிக்க பின்பற்ற வேண்டும் என்றுதான் இந்த புதிய ‘இந்திய கடல் மீன்பிடி மசோதா 2021’ அமைந்துள்ளது. ஆகவே கப்பலுக்கான சட்டத்தை பாரம்பரிய மீனவர்களுக்கு சுமத்தப் வேண்டாமென கோரிக்கை வைத்தார்.
தலைநகர் தில்லி பாராளுமன்ற கட்டடத்திற்குமுன்பு உலக மீனவர் தின கொண்டாட்டம்
அகில உலக மீனவர் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு – புதுச்சேரி மீனவர்கள் இணைந்து இந்திய தலைநகர் புது தில்லி பாராளுமன்ற கட்டிட முன்பாக மீனவர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம் தலைவர் ஜே. கோசி மணி தலைமை வகித்தார். கடல்சார் மக்கள் நல சங்க தலைவரும் தேசிய மீனவர் கூட்டமைப்பு கண்வனீ ரும் ஆகிய பிரவன்ீ குமார்முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் சமூக சேவகி லோவியா தெரேசா அவர்கள் மீனவர் தின கேக் வெட்டி அனைவருக்கு வழங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமானை சார்ந்த 23 மீனவர் அமைப்புகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடல்சார் மக்கள் நல சங்க தலைவரும் தேசிய மீனவர் கூட்டமைப்பு கண்வனீரும் ஆகிய பிரவன்ீ குமார் தலைநகரம் டெல்லிக்கு வந்து இந்த நாளை அவர்கள் சிறப்புப் செய்வதற்கு காரணம் மீனவர்கள் வாழ்வாதாரம் இயற்கை சீற்றம், சூறைக்காற்று, புயல் போன்ற காரணங்களால் மிகவும் பாதிக்கப்படுவதோடு டீசல் விலை ஏற்றத்தால் மீனவர்கள் வருமானம் இல்லாமல் பேரிழப்பை மீன்பிடித் தொழிலில் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் மத்திய அரசானது “இந்திய கடல் மீன்பிடி மசோதா 2021” என்ற சட்டத்தை அமல்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இச்சட்டத்தை இந்தியாவில் உள்ள 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 40 இலட்ச ம்மீனவர்களும்முழுமையாக எதிர்க்கின்றனர். காரணம் “இந்தியா கடல் சார்
மண்டலம்(அயல்நாட்டு மீன்பிடி கப்பல் ஒழுங்குமுறை) சட்டம் 1981 ரத்து செய்து, வெளிநாட்டு கப்பலுக்காக இயற்றப்பட்ட சட்டத்தின் சரத்துக்கள் அனைத்தையும் இந்திய பாரம்பரிய மீனவர்கள் தங்களது நாட்டுப்படகு, விசைப்படகு ஆகியவற்றை பயன்படுத்தி இந்திய கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு அவர்களை கட்டுப்படுத்த, ஒழுங்கு படுத்துகின்ற சட்டமாக பேர் மாற்றி “இந்திய கடல் மீன்பிடி மசோதா 2021” என்று மாற்றி அமைக்கப்படுகிறது.
சமூக சேவகி லோவியா தெரேசா கூறும்போது எங்கள் கோரிக்கைகள் அரசின் காதுக்கும், அரசியல்வாதிகளின் காதுகளுக்கு எட்டாமல் பொகுவதால், அவர்கள் கூடிமுடிவெடுக்கும் பாராளுமன்ற கட்டிடத்தின் சுவர்களுக்காவது எம் மீனவர்களின் கோரிக்கைகள் கேட்கட்டும் என்றுதான் தில்லி வந்து பாராளுமன்ற கட்டடத்திற்குமுன்பாக மீனவர் தினம் அனுசரித்து உள்ளோம்.
தேசிய மீனவர் மாநாட்டில் ஆதரவு தில்லி கான்ஸ்டிடுசன் கிளப்பில் ‘கடல்சார் மக்கள் நல சங்கம்’ மற்றும் ‘தேசிய மீனவர் சங்கம்’ நடத்திய தேசிய மீனவர் மாநாட்டிலும்; தில்லி ஐயி எஸ்ஐயி விலாகதில் ‘சிறிய அளவிலான மீன் தொழிலாளிகளுக்கான தேசிய தளம்’ நடத்திய தேசிய மீனவர் மாநாட்டிலும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமானை சார்ந்த 23 மீனவர் அமைப்பினர்களும் கலந்துகொண்டு மத்திய அரசு நிறைவேற்றமுயற்சிக்கும் ‘இந்திய கடல் மீன்பிடி மசோதா 2021’ எதிராக ஆதரவு திரட்டினர். மாநாட்டில் ஒன்பது கடலோர மாநிலங்களிலும் நான்கு யூனியன் பிரதேசங்களிலும் நாற்பது லட்சம் மீனவர்களுக்கும் இந்திய கடல் மீன்பிடி மசோதா 2021 இன் பாதிப்புகளை எடுத்துரைக்க வேண்டும் என தீர்மானிக்க பட்டது.
மீனவர்கள் இக்கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தால், விவசாயிகள தங்களது குடும்பங்களாக இணைந்து வந்து டெல்லியில் குடியேறி தங்களது வாழ்வாதாரமான விவசாயச்சட்டம் நிறுத்தப்படும் வரை அவர்கள் போராடியதுபோன்று மீனவர்களும் தங்களது குடும்பங்களுடன் தில்லியில் குடியேற நேரிடும் என்று உறுதிபட கூறுகின்றோம்.
இவ்வாறு தில்லியில் கூடிய மீனவர் சங்கப் நிர்வாகிகள் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளனர்.