Sat. Nov 23rd, 2024

“மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை;

விவசாயகச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மரணம் குறித்து பாரபட்சமற்ற, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் ஜனநாயக கடமைகள் ஆற்ற அவர்களை அனுமதிக்க வேண்டும்.

மூன்று வேளாண் சட்டங்களின் மீதான விவசாயிகளின் கவலைகளுக்கு பதிலளிக்காமல் மத்திய அரசு இனியும் அக்கறையின்றி இருக்க முடியாது. மொத்தத்தில் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே இயல்பு மற்றும் அமைதியை மீட்டெடுக்க ஒரே வழி என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்..