தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் சட்டத்திற்கு புறம்பாக லஞ்சம் பெற்று வருவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு எண்ணற்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த புகார்களின் உண்மைதன்மை அறிந்து, ஆதாரம் இருந்தால், தயவு தாட்சண்யமின்றி அனைத்து அதிகாரிகள் அலுவலகங்கள், இல்லம் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று முதல் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டன.
அதன் பேரில் இன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை, திருவண்ணாமலை, திருவான்மியூர், அரியலூர், பெண்ணாடம், சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.