ஊரக உள்ளாட்சி தேர்தலில்
பாஜக மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்துள்ளனர் திமுக பிரமுகர்கள் – தமிழ்நாடு
பாஜக இணைப்பு பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பாஜக அறிவு சார் பிரிவு சார்பில் சேவை மற்றும் அர்ப்பணிப்பு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அறிவு சார் பிரிவின் தலைவர் ஷெல்வி தமோதரேன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னார் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி :-
மக்களின் சேவைக்காக உள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்றும் கோவிட் காலத்தில் 30 கோடி மோடி கிட் மக்களின் மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பாஜகவை பொறுத்தவரை நாடு முதன்மையானது, இரண்டாவது கட்சி அதற்கடுத்து தான் தன்னலம், ஆனால் எதிர்க்கட்சியினர் தன்னலத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு இருக்கின்றனர் பிறகுதான் கட்சி மற்றும் நாட்டை கருதுகின்றனர் என்றார்.
மேலும் அரசியல் பகை காரணத்திற்காக மட்டுமே மோடி அரசு கொண்டு வரும் திட்டங்களை காரணமின்றி எதிர்க்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் திமுகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல் பிரமுகர்கள் வரை இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைக்கின்றனர். குண்டர்களை போன்று ரவுடிசம் செய்கின்றனர் இதனை வன்மையாக பாரதிய ஜனதா கண்டிக்கிறது.
தேர்தல் ஆணையமும் முதலமைச்சரும் தேர்தல் சுமூகமாக நடக்க நடவடிக்கை மேற்கொள்ள கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும்,இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை கிடைக்க வைக்கும் வேளாண் சட்டம், நீட் உள்ளிட்ட அனைத்தையும் எந்த காரணமும் இல்லாமல் எதிர்க்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
திமுகவின் முதற்கட்ட தலைவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரி வைத்துள்ளனர். அவர்களின் வருமானம் குறைந்துவிடும் என்று நீட் தேர்வை எதிர்க்கின்றனர் என குற்றம்சாட்டினார்.
நாளை நடைபெறவுள்ள பாரத் பந்த் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம் என விமர்சித்தார்.