Mon. Apr 21st, 2025

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சங்கர், சட்டப்பேரவையில் இன்று தனது துறைக்குரிய மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பேசும் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் சிறப்பம்சங்கள்:

259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே ரூ.50 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்.

40 விடுதிகளுக்கு ரூ.10 லட்சம் செலவில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்-

234 கள்ளர் பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கழிப்பிட வசதிகள் ரூ. 4 கோடியே 68 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும்

அனைத்து கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஆங்கில வழியிலான வகுப்புகள் தொடங்கப்படும்.

சிறப்பாக செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களால் ரூ.50 ஆயிரம் செலவில் விருதுகள் வழங்கப்படும்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 8 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் தனித் திறன் வளர்க்கும் பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.