செக்கிழுந்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் என பல்வேறு தியாகங்களை சுமந்த சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாள் விழா, தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
150 வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது அறிவிததிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, துறைமுகத்தில் உள்ள வ.உ.சி திருவுருச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
வ. உ. சி. க்கு சிறப்பு; முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் மனம் திறந்த பாராட்டு….
இதேபோல, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சி. யின் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, தூத்துக்குடியில் வ.உ.சி. திருவுருப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், பெரம்பூரில் வ.உ.சி கடைசியாக வாழ்ந்த ல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் வ.உ.சி. 150 வது பிறந்தநாள் விழா, விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.