Sat. Apr 19th, 2025

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;


பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டின் சொத்துகள்! பொருளாதார வளர்ச்சி- வேலை வாய்ப்பு – சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆணிவேர் அவை. இலாபம் மட்டுமே குறிக்கோளாக இன்றி மக்கள் நலன் கருதி இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதும் குத்தகைக்கு விடுவதும் நாட்டு நலனுக்கு உகந்தது இல்லை!


இதற்கு முன்தாக சட்டப்பேரவையில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரின் அறிவிப்பு வருமாறு: 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான சமூகநீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..