Sun. Apr 20th, 2025

பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது என்று திமுக மகளிர் அணித் தலைவர் மற்றும் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துப் பதிவு இதோ….

மேலும், கல்வி தான் ஒரு பெண்ணின் விடுதலைக்கும், ஒரு சமூகத்தின் விடுதலைக்கும் வழிவகுக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவடடங்களில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதும், இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுவதற்கு அடிப்படை காரணமாக குடும்பத்தின் வறுமையே முக்கிய காரணியமாக இருப்பதும் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் 45 சதவிகிதம் அளவுக்கு குழந்தை திருமணம் அதிகரித்திருப்பதாக, அந்த தகவல்களில் சுட்டிக்காட்டுள்ளன.

இதன் அடிப்படையிலேயே திமுக எம்.பி கனிமொழி, குழந்தை திருமணம் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.