சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளி நடப்பு செய்த பிறகு, கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்ததுடன், கலைவாணர் அரங்க வளாகத்தில் தர்ணா போராட்டத்திலும் சிறிதுநேரம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டனர்.