ஆப்கானின் புதிய ஆட்சி அமைக்கும் பணிகளில் தாலிபான் அமைப்பு முனைப்பு காட்டி வருகிறது.. இந்த நிலையில் இந்தியா வின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது…
ரூ 1000 கோடி
: ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியது தாலிபன் அமைப்பு. சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
ரஷ்யா ஆதரவு
: ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் இன்று காபூலில் உள்ள தலிபான்களை சந்திப்பார்! தாலிபான்களின் நடத்தையின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அங்கீகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்: ரஷ்ய அரசு
முந்தும் சீனா – பாகிஸ்தான்…
தாலிபன்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை சீனா பாகிஸ்தான் என இரண்டு நாடுகளும் அங்கீகரித்து விட்ட நிலையில் இந்தியா என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் உற்று நோக்க வேண்டிய ஒன்று. ஆதரிப்பதிலும் ஆதரிக்காமல் இருப்பதிலும் பெரிய சிக்கல்கள் இந்தியாவிற்கு உள்ளது
அமெரிக்காவில் தஞ்சம்..
: தஜிகிஸ்தான் நாட்டுக்கு செல்ல முயன்ற அஷ்ரப் கானிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஓமன் நாட்டில் உள்ள அவர் அமெரிக்காவுக்கு செல்லத் திட்டம்!
இந்தியர்களின் நிலை?
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் வெளியேற்றப்படவில்லை என தகவல். காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் இந்திய விமானம் ஒன்று இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது! தலிபான்கள் காபூலில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளதால், இந்திய தூதரகத்தில் இருக்கும் ஊழியர்களை விமான நிலையத்திற்கு எப்படி பாதுகாப்பாக அழைத்து வருவது என்பதும் சிக்கலில் உள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு நாடுகள், காபூலில் இருந்த தங்களது அதிகாரிகளை படிப்படியாக வெளியேற்றி வந்த சூழலில்…
கடந்த மூன்று முதல் நான்கு நாட்களாக இந்திய தூதரக அதிகாரிகள் ஏன் வெளியேற்றப்படாமல் இருந்தார்கள் ? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.