Mon. Nov 25th, 2024

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்..

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக 100-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் ஜப்பான் செல்கின்றனர். வருகிற 17-ந்தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் செல்வார்கள்.

இந்த நிலையில் இன்று வீரர்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியிடம் பிரதமர் மோடி ‘‘பாரிஸில் உங்களுடைய சாதனைக்குப் பிறகு, நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளீர்கள். உங்களுடைய பயணம் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.

தீபிகா குமாரி ‘‘தொடக்கத்தில் இருந்து எனது பயணம் சிறப்பாக சிறப்பாக உள்ளது. மூங்கிலில் அம்பு செய்து தொடங்கினேன். அதன்பின் படிப்படியாக நவீன அம்புக்கு மாறினேன்’’ என்று மிகுந்த பூரிப்பு டன் பதிலளித்தார்..

இதேபோல் ஒவ்வொரு வீரர்- வீராங்கனை களின் தனித்தன்மையை சுட்டிக் காட்டி பிரதமர் பாராட்டு மழை மொழிந்தார்…