சேலம் பயணத்தின் போது ஒரு பெண்மணி மனுவோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை வழியாக வந்த முதல்வர், மனுவோடு நிற்கும் பெண்மணியை தூரத்தில் இருந்தபோது கவனித்து, அவரது அருகே வந்து காரை நிறுத்தினார். முதல்வரிடம் தனது கையில் இருந்த மனுவை வழங்கிவிட்டு, சுருக்கமாக தனது கோரிக்கையை கூறியுள்ளார். அவரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், அதே இடத்தில், அவரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருமாறு, உயரதிகாரிக்கு அந்த மனுவிலேயே ஆணையிட்டு கையெழுத்திட்டுள்ளார்.
எவ்வித பந்தாவும் இன்றி மிகவும் எளிமையாக முதல்வர் நடந்து கொண்டதைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் மிகவும் நெகிழ்ந்துப் போய் முதல்வர் மு.க.ஸ்டாலினை மனதாரப் பாராட்டினார்கள்.