Mon. Nov 25th, 2024

இந்தியாவில் இதுவரை 23 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்..

தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் இன்று மாலை உரையாற்றினார்..அதன் விவரம் இதோ….

கொரோனாவை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டும்தான்.

ஏப்ரல்-மே மாதங்களில் மருத்துவ ஆக்சிஜன் தேவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்தது.

ஆக்சிஜன் சப்ளை வசதியை போர்க்கால அடிப்படையில் அதிகரித்து சாதித்துள்ளோம்.

சில தடுப்பூசி நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி உற்பத்தி செய்து வருகின்றன.

கொரோனாவைத் தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளன.

ஆரம்பத்தில் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருந்தது தற்போது இந்த வேகம் அதிகரித்துள்ளது.

இன்னும் 3 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் தீரும்.

மூக்கில் சொட்டு மருந்தாக செலுத்தும் வகையிலான தடுப்பு மருந்து விரைவில் வரும்.

முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் ..

தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு
இனி இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும்.

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.

தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

நாங்களே ஏன் தடுப்பூசி தயாரிக்க கூடாது என சில மாநிலங்கள் கேள்வி எழுப்புகின்றன.

தடுப்பூசி வாங்குவது எவ்வளவு கஷ்டமான பணி என்பது இப்போதுதான் மாநில அரசுகளுக்கு தெரிய வந்துள்ளது.

மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்து வருகிறது.

இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும்

மாநில அரசுகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும்-

தடுப்பூசி சப்ளையை அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க உள்ளோம்.

வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி வாங்குவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன-

பிரியமான பலரை இழந்து விட்டோம்-

நவீன உலகம் கொரோனாவை போன்று ஒரு பெருந்தொற்றை கண்டதே இல்லை.

கடந்த 100 வருடங்களுக்கு மேலாக இந்தியா இது போன்ற ஒரு சவாலான சூழ்நிலையை கையாண்டதில்லை.

கொரோனா இரண்டாவது அலையில் நமது உறவுகள் பலரை நாம் இழந்துள்ளோம்; கொரோனாவுக்கு எதிராக இந்தியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரை மேற்கொண்டுள்ளது –

இவ்வாறு பிரதமர் மோடி.கூறினார்..