அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று நண்பகல் திடீரென்று வந்த அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சிக் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உள்பட 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டர். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி, தி.நகர் சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை.
அரசியலில் இருந்து விலகியதாக ஊடகங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்.
சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது.
அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை –
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக் கூடாது; முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்-
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை -இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்..