Fri. Nov 22nd, 2024

கொரானாவால்
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைத்துக் காட்ட படுவதாகவும் பரிசோதனை இதுவரையில் அதிகரிக்கவில்லை எடப்பாடி அரசு மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கொரானா நோயாளிகளுக்கு அளிக்கப்படும்
அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தனித்தனியே கேட்டிருந்தார்

இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மற்றும் நகராட்சியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காய்கறிகள் மற்றும் நிவாரணப் பொருட்களையும் முன்னாள் முதலமைச்சர் வழங்கினார்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்

சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் மூச்சுத்திணறல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர்.சேலம்,ஆத்தூர்,ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன
ICU சேர்த்து ஆக்ஸிஜன் 1153 படுக்கைகள் நிரம்பிவிட்டன
எவரேனும் டிஸ்சாரஜ் ஆனால்தான் புதிதாக தொற்று ஏற்படுவோருக்கு படுக்கை கிடைக்கிறது என்றார் மேலும்

உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அரசு போர்க் கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்
ஏற்கனவே இருந்த படுக்கைகள் மட்டுமே தற்போது வரை உள்ளன
எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்

சேலம் மாவட்டம் முழுக்க கோவிட்க்காக 3800 படுக்கைள் உள்ள நிலையில் 11700 என தவறான எண்ணிக்கையை வழங்குவதாக குற்றம் சாட்டினார்

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 267 பரிசோதனை மையங்கள் மட்டுமே தற்போது வரை உள்ளன.

பரிசோதனை மையங்களை அதிகரித்து RTPCR பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றார்
இறப்பை குறைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இறப்பு விவரங்களை வெளிப்படைத்தன்மையோடுவெளியிட வேண்டும்
தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது
ஆம்புலன்ஸில் காத்திருந்து உயிரிழப்பவர்களை முறையாக உரிய கவர்களை கொண்டு மூடப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

சடலங்கள் பல மணி நேரம் காத்திருந்து அடக்கம் செய்ய வேண்டி உள்ள நிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊரடங்கு அறிவித்த பின்னர் மீண்டும் ஒரு ஊரடங்கு அறிவித்து அதற்கு முன்னர் தளர்வு கொடுத்தால் 6 லட்சம் பேர் நகர் புறத்திலிருந்து கிராம்ப்புறத்திற்கு வந்துள்ளனர்

இவர்களை முறையாக கண்காணிக்கவில்லை என குற்றம் சாட்டினார்

கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த எடப்பாடி தினத்தந்தி செய்தியாளர் நல்லதம்பி குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய், அதிமுக சார்பாக வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் பற்றி முழுமையாக தெரியாத போதும், தடுப்பூசி வராத போதும் கொரோனாவை எங்கள் ஆட்சியில் கட்டுபடுத்தி வைத்திருந்தோம் ஆனால்
தற்போது, மருந்து, தடுப்பூசி இருந்தும், இந்த ஆட்சியில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முடியவில்லை
அதேபோல் கருப்பு பூஞ்சை நோயால் பலர்பாதிக்கப்பட்டுள்ளனர்
அரசாங்கம் கவனம் செலுத்தி, கருப்பு பூஞ்சை நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்