Wed. Nov 27th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக நாளை முதல் இரண்டு நாட்கள் 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கொரேனோ தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சை முறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

நாளை காலை சென்னையில் இருந்து விமானம் போல சேலம் செல்லும் முதல்வர், விமான நிலையத்தில் இருந்து சேலம் இரும்பாலைக்கு செல்கிறார். அங்கு 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கும் முதல்வர், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து கோவை செல்லும் முதல்வர், கொடிசா அரங்கில் கொரோனோ தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதுடன், மருத்துவ நிபுணர்களுடன் கொரோனோ சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். அங்கிருந்து குமரகுரு கல்லூரிக்கு செல்லும் முதல்வர், அங்கும் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் மதுரை செல்லும் முதல்வர் நாளை மறுநாள் மதுரையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விட்டு திருச்சி செல்கிறார். அங்கும் மருத்துவ நிபுணர்களுடன் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவக் சிகிச்சை முறைகள் குறித்துஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வரின் முழு சுற்றுப்பயணம் குறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு முழு விவரம் இதோ…

CM-TOUR-PROGRAMME