Fri. Nov 22nd, 2024

தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து கோரி பிரதமர் மோடிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் இதோ…

கொரோனா 2 வது அலையால் தமிழகத்தில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் 32,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இருந்தாலும், நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து வருவதால் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நேரத்தில், நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக வழங்குவதுடன் தமிழகத்துக்கான தடுப்பூசி விநியோகத்தையும் அதிகரித்து வழங்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.