தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அந்தவகையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (வெள்ளிக்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இந்த தாழ்வு மண்டலம் நாளை (சனிக்கிழமை), நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) புயலாக மாறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிதாக உருவாகும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் கடற்கரை பகுதிகலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைதிரும்பும் படியு கடலோர காவல்படை அறிவுறுத்தி வருகின்றனர். சிவப்புக்கொடி காட்டியும் ஒலிபெருக்கி மூலமும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை மீனவர்களுக்கு கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் புதிதாக புயல் உருவாகுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது