1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது அந்த சிறுவனுக்கு வயது 3..கோவை குனியமுத்தூருக்கு வந்த மக்கள் திலகத்தை தனது தந்தையில் தோள்மீது ஏறி நின்று பார்க்கும் போது அந்த தந்தைக்கு தெரியாது? பிற்காலத்தில் தனது மகன் தமிழக அரசியலில் முக்கிய ஆளுமையாக வலம் வருவார் என்று?
1977-ஆம் ஆண்டு கழகம் சந்தித்த முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல்.. அப்போது அந்த சிறுவனுக்கு வயது 8. மூன்றாவது படித்துக்கொண்டிருந்தான்.. 1984-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, மதுக்கரை அரசு பள்ளியில் 10-ஆவது படிக்கும் 15 வயது நிரம்பிய பள்ளி மாணவனாக அந்த சிறுவன் வளர்ந்திருந்தான் ….
1989-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தபோது கல்லூரி செல்லும் 20-வயது நிரம்பிய இளைஞனாக அந்த சிறுவன்.. 1990-ஆம் ஆண்டு தனது 21-ஆவது வயதில் முதன் முதலாக குனியமுத்தூர் பேரூராட்சி இளைஞரணி தலைவராக அரசியலில் தடம் பதிக்கிறார்..1996-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தபோது 27-வயது இளைஞனாக அரசியலில் பயணித்துக்கொண்டிருக்கிறார் அன்றைய 3-வயது சிறுவன்….
2000-ஆம் ஆண்டு, தனது கடின உழைப்பின் பலனாக #இதயதெய்வம்#அம்மா அவர்களால் வழங்கப்பட்ட ‘கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்’ என்கின்ற பொறுப்பை பெற்று கழகப்பணியாற்றுகிறார்..
2001-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்.. 32 வயது நிரம்பிய அரசியல்வாதியாக, குனியமுத்தூர் நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார் வளர்ந்துவிட்ட அந்த சிறுவன்.கழக பணியினை சிறப்பாக மேற்கொண்டதற்காக 2002-ஆம் ஆண்டு ‘பேரூர் ஒன்றிய கழக செயலாளர்’ பதவி அவரை தேடி வந்தது..காலங்கள் உருண்டோடுகிறது..
. 2006 சட்டமன்ற தேர்தல்… தனது 37-ஆவது வயதில் #புரட்சித்தலைவி அவர்களின் ஆணைக்கு இணங்க கோவை பேரூர் தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தார்.. அதுவரை இல்லாதவகையில் பேரூர் தொகுதி வரலாற்றில் ஒரு வேட்பாளர் 1,14,024 வாக்குகள் பெற்று சாதனை படைத்ததும் இவர்தான்..
பிறகு 2007-ஆம் ஆண்டு அம்மா அவர்கள் ‘கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர்’ பதவியை இவருக்கு வழங்கி அழகு பார்த்தார்கள்..கடும் உழைப்பின் பலனாக 2010 ஆம் ஆண்டு முதல் ‘கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர்.’ என்ற பதவியை அடைந்தார்..2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் அவர் போட்டியிட அம்மா அவர்கள் வாய்ப்பு வழங்கினார்..
இந்தமுறை தொகுதி சீரமைப்பின் படி பேரூர் தொகுதி தொண்டாமுத்தூர் தொகுதியுடன் இணைந்தது. ஆகவே இந்த தொகுதியில் போட்டியிட்டு 99,886 வாக்குகள் பெற்றார்..தனது 42-ஆவது வயதில் முதன் முதலாக அமைச்சர் பொறுப்பை ஏற்றார்..
2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 1,09,519 வாக்குகள் பெற்றார்..இப்போது தனது 47-ஆவது வயதி இரண்டாவது முறையும் பொறுப்பை ஏற்றார்..இன்றைக்கு 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் 4-ஆவது முறையாக போட்டியிட்டு 1,23,538 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவேட்பாளரை காட்டிலும் 41,709 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்..
திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள்:81,829 புரட்சித்தலைவரின் தாரக மந்திரமாம் ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்பதை நிரூபித்தவர்தான் இன்று 52 வயது நிரம்பிய தலைவனாக மிளிரும் அண்ணன் எஸ்.பி.வேலுமணி அவர்கள்..
தொகுப்பு: #SPVelumaniTeam ஊடக பிரிவு
இவ்வளவு மகத்தான வரலாறு எழுதிய எஸ்.பி.வேலுமணியின் ஊடகப் பிரிவு, உள்ளாட்சித்துறை அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்தார் என்று ஆதாரங்களோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனர் அலுவலகத்தில் கட்டு கட்டாக அவருக்கு எதிராக கொடுக்கப்பட்டிருக்கும் புகார்களையும் சேர்த்திருந்தால், இந்த வரலாற்று ஆவணத்திற்கு முத்தாய்ப்பாக இருந்திருக்கும்..
ஊடகப் பிரிவு தம்பிகளா, அடுத்து முறை முழுசா எஸ்.பி.வேலுமணியின் வரலாற்றை எழுதுங்கப்பா…
சும்மா சொல்லக் கூடாதுங்கண்ணா எஸ்.பி.வேலுமணியின் அரசியல் சித்துவிளையாட்டுகளை….ஆட்சிப் போயிடுச்சி.. அதுக்காக கவலைப்பட்டுக்கிட்டு இருக்கனும்மா என்ன? கோவை ஜனங்களிடம் எப்படி ஆயுளுக்கும் நல்லவனா இருக்கிறது…அரசியல் மேஜிக் வேலையெல்லாம் அண்ணனுக்கு அத்துப்படி…
திமுக அமைச்சர்கள் கோவைக்கு வர்றாங்களா…எதுக்கு ஈகோ பார்க்கனும்..ஓடிப் போய் சரண்டராகிடு…
https://www.facebook.com/SPVelumani/posts/1564764227046872