Tue. Apr 30th, 2024

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் பேரவைத் தலைவராக அப்பாவும் துணைப் பேரவைத்தலைவராக பிச்சாண்டியும் போட்டியிடுவார்கள் என்று திமுக சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் புதிய சட்டமன்ற உறுப்பினர்களளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தற்காலிக பேரவைத்தலைவர் கு.பிச்சாண்டி முன்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, பேரவைத்தலைவர் தேர்வுக்கான நடைமுறை தொடங்கியது. அப்பாவு மற்றும் பிச்சாண்டிக்கு எதிராக வேறு யாரும் போட்டியிடாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.. தேர்தலுக்கான நாள் மே 12 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள தால் புதன்கிழமை முறைப்படி இருவரின் தேர்வும் அறிவிக்கப்படும்.

சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தன்னை பேரவைத்தலைவர் பதவிக்கு முன்னிறுத்தியதற்கும், போட்டியின்றி தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும் நன்றி தெரிவித்ததுடன், அவரிடம் ஆசியும் பெற்றார்.

இதேபோல, துணை பேரவைத்தலைவராக தேர்வு செய்யப்படவுள்ள கு.பிச்சாண்டியும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார்.

பேரவைத் தலைவர் அப்பாவு…..
துணைத்தலைவர் கு.பிச்சாண்டி…..

முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.