கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையின் திடீர் டெல்லி பயணமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான அவரது சந்திப்பும் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
அம்மாநில பாஜக அரசிலும், அரசியலிலும் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக கடுமையான கொந்தளிப்பு உருவாகியுள்ளது. கர்நாடக மாநில அரசு நிர்வாகத்தில் ஊழல் மீண்டும் தலையெடுக்கத் துவங்கி விட்டதாலும், அதுவும் உயிர்க்கொல்லி நோயான கொரோனோ தொற்று உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் பல நூறு கோடி ரூபாய் ஊழலில் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு நெருக்கமானவர்களே ஈடுபட்டு வருவதாகவும், அதனை தடுக்க எடியூரப்பா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அம்மாநில பாஜக முன்னணி தலைவர்களே வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
அவர்களை மேலும் மேலும் வெறுப்பு ஏற்றும் வகையில் கர்நாடகாகவில் உள்ள காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், முதல்வர் எடியூரப்பா அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை 24 மணிநேரமும் இடைவெளியில்லாமல் ஒளிப்பரப்பி கொண்டிருப்பதும், பாஜக நிர்வாகிகளிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் கொரோனோ ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அதை அதிகரித்து தருமாறு ஒருவர் பாஜக உணவுத்துறை அமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டு உள்ளார்.. அவருக்குப் பதிலளித்த உணவு அமைச்சர் உங்களை எல்லாம் யார் உயிரோடு இருக்கச் சொல்றது.. சாப்பாட்டுக்கு வழியில்லை என்றால் செத்து போங்கள் என்று கூறியுள்ளார்..
அந்த ஆடியோ பதிவை ஒளிப்பரப்பிக்கிக் மானம் போகிற மாதிரி பெண் ஊடக நெறியாளர் ஆவேசமாக பேசிய வீடியோ வையும் எடியூரப்பாவின் எதிர் கோஷ்டியினர் அமித்ஷா பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பெங்களூரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அந்த தகவல்தான் அக்னி நட்சத்திர சூட்டை விட அதிக அனலை கிளப்பிவிடுகிறது.
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை எடியூரப்பாவை பகைத்துக் கொண்டால், அங்கு பாஜக ஆட்சி நிலைக்காது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்து என்ற சைவ சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பாவிற்கு அந்த சமுதாயத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தீவிரமான ஆதரவாளர்களாக உள்ளார்களாம்.
கொரோனோ ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கினால் பாஜக ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும் என்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உள்ளடக்கிய டெல்லி பாஜக மேலிடத்திற்கு நன்றாகவே தெரியும்.
இருந்தாலும், முதலமைச்சர் எடியூரப்பாவின் செயல்பாடுகளால், கர்நாடக பாஜக.வுக்கு எதிராக பொதுமக்களிடம் நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், பாஜக அரசின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பதவியில் புதிய நபரை நியமிக்க உள்தறை அமைச்சர் அமித்ஷா முடிவெடுத்திருக்கிறாராம். அதுதொடர்பாக விவாதிப்பதற்காகதான் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா விசாரணை நடத்தியுள்ளார். இதேபோல் எடியூரப்பா மகன் உட்பட மேலும் 3 பாஜக தலைவர் களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்…
டெல்லியில் இருந்து பசவராஜ் பெங்களூர் திரும்பியவுடனே தன்னை பற்றி பரப்பப்படும் வதந்திகளுக்கு தாமாகவே முன்வந்து நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தியாளர்களை அழைத்து பேசிய பசவராஜ், எடியூரப்பாவை மாற்றுவது தொடர்பாக தான் டெல்லி செல்லவில்லை என்றும், அதுதொடர்பாக அமித்ஷாவிடம் பேசவில்லை என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்.
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்ட கதையாக, பசவராஜின் பேட்டிக்கு கண், காது, மூக்கு வைத்து பெங்களூரில் வதந்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றிவிட்டு பசவராஜை முதல்வராக நியமிக்க போகிறார்கள் என்பதும், எடியூரப்பாவின் கோபத்தை தணிக்க, அவரை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீர்மானித்து இருக்கிறாராம்.
இதேவேளையில் அரவக்குறிச்சி தொகுதியில் படுதோல்வி அடைந்த தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ். ஸை கேரள மாநில ஆளுநராக நியமிக்கவும் யோசனையில் இருக்கிறாராம் அமித்ஷா..
கேரளாவில் உள்ள இளைஞர்களை பெருமளவில் பாஜக பக்கம் இழுக்க அண்ணாமலையின் செயல்பாடுகள் உதவும் என்றும் 2024 ல் கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான எம். பி தொகுதிகளை கைப்பற்ற அண்ணாமலை மூலம் அம்மாநில மக்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சிந்தனையில் உள்ள மக்களை வரும் மூன்றாண்டுகளில் அண்ணாமலை மூலம் மடை மாற்றம் செய்யவும் பக்கா திட்டத்தோடு இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்கிறார்கள் கர்நாடக பாஜக முன்னணி தலைவர்கள்..
உள்துறை அமைச்சர் அமித்ஷா கையில் தூக்கியிருக்கும் அஸ்திரத்தால் கர்நாடக பாஜக கலகலத்து கிடக்கிறது.
தாரை இளமதி சாருக்கு வாழ்த்துக்கள். உங்கள் செய்தி கட்டுரை பிரமாதம். வெழுத்து வாங்குறீங்க.
அண்ணாமலை தேர்தல் பரப்புரையில், எப்படி பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கேரளா போகிறாரோ இல்லையோ, புழல் சிறைக்கு சென்று வருவது உறுதிங்கோ. தேர்தல் கேஸ் பெண்டிங் இருக்கு. அதுபோதாதா?.