Sat. Nov 23rd, 2024

அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் திமுக கட்சிப் பிரச்னைக்காக காவல்துறையினருக்கு போன் செய்யக் கூடாது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அரசு அதிகாரிகள் வெளியேறியவுடன் தனிப்பட்ட முறையில் அமைச்சர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் சில அறிவுரைகளை கூறியுள்ளார்..அப்போது தொகுதி பிரச்னைகள் குறித்து என்னிடமும் தெரிவிக்கலாம் என்றும் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் போதே தன்னிடமும் நேரடியாக முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சி பிரச்சினைக்காக காவல்துறைக்கு போன் செய்யக் கூடாது என்றும் காவல் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்றும் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருப்பதால்

மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக .வினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, திமுக சார்பில் சட்டமன்றத் பேரவைத் தலைவர் தேர்தலில் திமுக எம்.எல்.ஏ., அப்பாவும், துணை பேரவைத்தலைவர் தேர்தலில் பிச்சாண்டி எம்.எல்.ஏ.வும் போட்டியிடுவார்கள் என்று திமுக அறிவித்துள்ளது. அதன் விவரம் இதோ…..

‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு MLA.வும் துணைத்தலைவராக கு. பிச்சாண்டி MLA வும் திமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

வருகிற 12-5-2021 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவும் – துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு திமுக தலைமைக் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்ட கு.பிச்சாண்டிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி நியமனம் செய்து வைத்தார்.