தமிழகத்தில் இன்று 28,897 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 236 பேர் உயிரிழந்தள்ளனர். கிட்டதட்ட டெல்லியில் நாள்தோறும் நடைபெற்று வரும் மரணங்களைப் போல தமிழகத்திலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த பல நாட்களாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 547 பேர் கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை 2,40,08,587 பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 1,53,790 பேருக்கு தொற்று தாக்குதல் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை முடிவடைந்து 23,515 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் 151 பேரும், தனியார் மருத்துமனைகளில் 85 பேரும் உயிரிழந்துள்ளனர்.
