உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்ததை போலவே இந்தியாவின் நிலை படுமோசமாக மாறி வருகிறது..ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர்…
இத்தியாவில் புதிதாக 4,12,262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,10,77,410 ஆக உயர்ந்தது.
புதிதாக 3,980 பேர் உயிரிழந்துள்ளனர்; நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,29,113 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,80,844 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 35,66,398 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.99% ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் இதுவரை 16,25,13,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் நிலைமை கைமீறிப் போவதையடுத்து விரைவில் முழு ஊரடங்கிற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன..
கேரளாவை போல 15 நாள் ஊரடங்கு இருக்குமா அல்லது ஒரு மாதத்திற்கான ஊரடங்காக இருக்குமா என்று பொதுமக்கள் அச்சத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்….