Sun. Nov 24th, 2024

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, இன்று காலை திமுக தலைவர் மு.க..ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று பன்ரிவால் புரோகித்தைச் சந்தித்தார்.

அப்போது, திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றிருப்பதையடுத்து, புதிய ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்த சந்திப்பின் போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்பிற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசி ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஆட்சி அமைக்க அழைப்பது தொடர்பாக இன்று மாலைக்குள் தகவல் தெரிவிப்பதாக ஆளுநர் கூறியுள்ளதாக தகவல் தெரிவித்தார்.