Mon. Nov 25th, 2024

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் இதோ……

தமிழ் நாட்டிற்கான ஆக்சிஜன் தேவையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. 

இன்றைய கொரோனா சூழலை எதிர்கொள்ள தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே நாளொன்றுக்கு உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் போது தமிழகத்தின் தேவையை சமாளிக்க கடுமையாக போராட வேண்டிய சூழல் ஏற்படுவதுடன் பற்றாக்குறையும் கடுமையாக ஏற்படுகிறது.

இதனால், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தியாகும் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இதர மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.