Sun. Nov 24th, 2024

மரு. அரவிந்தன் சிவக்குமார், எழுப்பியுள்ள சந்தேகம் இது…….

AEFI adverse events following vaccination என்பதை ஏன் எதற்கு எப்படி யாரால் ஆய்வு செய்யவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ஓர் manual ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் 19 தடுப்பூசிக்கும் அப்படியே .

அதில் மிக சாதாரண பக்கவிளைவுகளில் தொடங்கி அதி தீவிர பக்கவிளைவுகள் வரை ஆவணப்படுத்துதலிலிருந்து ஆய்வு செய்யவேண்டியது வரை எப்படி செய்யவேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளன.

Severe AEFI தடுப்பூசிக்கு பிறகான அதி தீவிர பக்கவிளைவுகள் அது மரணமாகவும் இருக்கலாம் அதை மிக நுட்பமாக ஆய்வு செய்யவேண்டும் என்கிறது.

மேலும் establishing causality அதாவது மரணத்திற்கு தடுப்பூசி தான் நேரடியான காரணமா என்பதையும் ஆய்வு செய்யவேண்டும் என்கிறது…

ஒருவர் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார். மறுநாள்
சுயநினைவில்லாயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அவருக்கு மாரடைப்பு என்று சொல்கிறார்கள்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
24 மணி நேரத்திற்குள் இறந்து போகிறார்.
உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் படி இது severe adverse event following immunisation என்ற பிரிவில் ஆய்வுகள் செய்யப்படவேண்டுமா வேண்டாமா என்பது தான் கேள்வி.

மேலும் தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளை மக்களுக்கு யார் சொல்லவேண்டும்?
அந்த பக்கவிளைவு உதாரணமாக அது ரத்தம் உறையும் தன்மையை அதிகப்படுத்தலாம் அப்படி உங்கள் நுரையீரல் தமனியில் ரத்தம் உறைந்தால் உங்களுக்கு இன்னன்ன அறிகுறிகள் தென்படும், உங்களின் இருதய தசைகள் ரணமானால் இன்னன்ன அறிகுறிகள் தென்படும் என்று யார் சொல்லவேண்டும்?
மக்களே தெரிந்து கொள்ளவேண்டுமா?
சாதாரண படபடப்பாக மட்டுமே தொடங்கும் myocarditis எனப்படும் இருதய தசை ரணமாதல் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
இதை மக்களிடம் யார் சொல்வது யாருடைய கடமை அது ?
இருமல் தும்மல் இருந்தால் அதை கடந்து செல்லாதீர்கள் அது கொரோனாவாக இருக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
பக்கவிளைவின் அறிகுறிகளை யார் விழிப்புணர்வு ஏற்படுத்துவது?

https://tamil.abplive.com/news/a-doctor-appeals-to-govt-to-clarify-about-actor-vivek-death-and-covid-vaccine-1316