சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வெளிநபர் அனுமதிக்கப்படுவது தொடர்பாக திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி ஆகியோர், தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அலுவலரைச் சந்தித்து, திமுக தரப்பில் புகார் மனுவை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திமுக நிர்வாகிகள் பேசினர். அதன் விவரம் இதோ….
தமிழக தேர்தல் ஆணையரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.
கடந்த 6நாட்களாக பல்வேறு பிரச்சனை நடக்கிறது.
கோவை, திருவள்ளூர், லயோலா கல்லூரி போன்ற இடங்களில் இரவு நேரங்களில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் தேவையற்றவர்கள் உள்ளே நுழைகின்றனர்.
லாரி மூலமாக நபர்களை உள்ளே அனுப்புகின்றனர்.
ராமநாதபுரத்தில் 33பேர் லேப்டாப் எடுத்து உள்ளே செல்கின்றனர். பல இடங்களில் இது போன்று நடக்கிறது.
4நாட்களுக்கு முன் புகார் அளித்துள்ளோம். தொடர்ந்து இது நடைபெறுவதால் மீண்டும் புகார் கொடுக்க வந்துள்ளோம்.
இவ்வாறு திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.