Sat. Nov 23rd, 2024

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவை மாற்ற சதி நடப்பதாக, திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குள் கணினி நிபுணர்கள் வந்து செல்ல திடீர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் நடத்த 3 கணினி நிபுணர்கள் அனுமதித்து உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது.

கணினி நிபுணர்கள் அனுமதித்தது பற்றி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் அளித்துளேன்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகாரை அனுப்பியுள்ளேன்.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

பாமக.வில் இருந்து விலகி வந்த வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியில் இவர் பண்ருட்டியில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை எதிர்த்து இவர் போட்டியிடுவதால், இந்த தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், வேல்முருகனை ரவுடி, பொறுக்கி என மிகவும் தரம்தாழ்ந்துப் பேசினார். யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றிப் பெறக் கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறிய அன்புமணி, பிரசாரம் செய்த முழு நேரமும் வேல்முருகனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.