Sun. Nov 24th, 2024

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 29 தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக, மாநிலம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொண்டார். அந்த வரிசையில், திருப்பத்தூர் பிள்ளையார்பட்டியில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக பேசியதாக கூறி திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மு க ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குமரேசன், முத்துராமலிங்கம், அழகர்சாமி ,சிவகுமார் உள்ளிட்டோர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து மு க ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிமன்றம், அந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கியது. மேலும், வழக்கு விசாரணை ஏப்ரல் 21க்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.